விளையாட்டு

லீட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி

லீட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி

Veeramani

லீட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

3வது நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இருந்த இந்தியா 4வது நாளில் 278 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 91 ரன்கள், ரோகித் 59, கோலி 55, ஜடேஜா 30 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணியின் தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகள், ஓவர்டன் 3 விக்கெட்டுகள், ஆண்டர்சன், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இங்கிலாந்தில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, கேப்டன் ரூட் உள்ளிட்ட மேல்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மூன்றாம் நாளில் 432 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

354 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 34 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுலின் விக்கெட்டை இழந்தது. பின்னர் ரோகித் சர்மாவும், புஜாராவும் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். அரை சதம் விளாசிய ரோகித் 59 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் சராசரியான வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளுக்கு 215 ரன்கள் சேர்த்தது. புஜாரா 91 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய 4 வது நாள் ஆட்ட தொடக்கத்தில் இந்தியா 139 ரன்கள் பின் தங்கியிருந்தது.