விளையாட்டு

கவுண்டி அணிக்காக சொந்த நாட்டு அணியை துறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்

கவுண்டி அணிக்காக சொந்த நாட்டு அணியை துறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்

webteam

இங்கிலாந்து கவுண்டி அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சொந்தநாட்டுக்காக விளையாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு முன்னணி வீரர்கள் துறந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் மற்றும் பேட்ஸ்மேன் ரைலி ரூசோவ் ஆகியோர் இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியான ஹாம்ஷையர் அணிக்காக விளையாட ‘கோல்பாக்’ ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தமானது சாதாரண ஒப்பந்தங்கள் போலல்லாமல், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டது. குறிப்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீரர்கள் சொந்த நாட்டு அணிக்காக விளையாட முடியாது.
கைல் அபாட் நான்கு வருடங்களுக்கும், ரைலி ரூசோவ் மூன்று வருடங்களுக்கும் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இனி ஒப்பந்தம் முடியும் காலம் வரை அவர்கள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பபட்டுள்ளது. கைல் அபாட் மற்றும் ரைலி ரூசோவ் ஆகியோரின் இந்த முடிவு அணிக்கு பின்னடைவு என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லார்கட் கூறியுள்ளார். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியமான பங்காற்றிய அபாட், வெற்றிக்குப் பின்னர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவர்களின் முடிவு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.