விளையாட்டு

தந்தை இறந்த தாளாத சோகம்; களத்தில் நின்று வென்று காட்டிய மந்தீப் சிங்

தந்தை இறந்த தாளாத சோகம்; களத்தில் நின்று வென்று காட்டிய மந்தீப் சிங்

EllusamyKarthik

கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மந்தீப் சிங், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

மூன்று நாட்களுக்கு முன்பு அவரது தந்தை நாள்பட்ட நோயினால் காலமானார். இருப்பினும் துபாயில் முகாமிட்டுள்ள அணியுடனே தங்கிவிட்டார் மந்தீப்.

அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் காயம் காரணமாக ஆடும் லெவனிலிருந்து விலக அவருக்கு மாற்றாக கேப்டன் கே.எல்.ராகுலுடன் இந்தாவருக்கு போட்டியில் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தார் மந்தீப்.

இந்நிலையில் கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் 56 பந்துகளில் 66 ரன்களை சேர்த்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். 

மந்தீப் அரை சதம் கடந்ததும் டக் அவுட்டில் இருந்த கேப்டன் கே.எல்.ராகுலும், கோச் அனில் கும்ப்ளேவும் களத்திற்கே வந்து அவரை வாழ்த்தி ஆறுதல் சொல்லியிருந்தனர்.

மந்தீப் அரை சதம் கடந்ததும் வான் நோக்கி பார்த்தார். ‘அப்பா இது உங்களுக்கு சமர்ப்பணம்’ என மந்தீப் சொன்னது போல இருந்தது. 

“இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க வேண்டும் என அப்பா அடிக்கடி சொல்வார். நான் சதம் அல்லது இரட்டை சதம் விளாசியிருந்தால் கூட ஏன் அவுட்டானாய் என கேட்பார். 

பந்தை அதிரடியாக அடித்து ஆடுவது தான் எனது ரோல். ஆனால் அதில் COMFORTABLE இல்லை என்றாலும் எனது நேச்சுரல் கேமை விளையாட கேப்டன் ராகுல் அனுமதித்தார். 

கெயில் உடன் விளையாடிய போது நீங்கள் ஓய்வே  அறிவிக்கக் கூடாது என சொன்னேன். அவர் அற்புதமான பேட்ஸ்மேன்” என ஆட்டத்திற்கு பிறகு மந்தீப் சொல்லியிருந்தார்.