விளையாட்டு

இந்தியாவிற்காக ஆடும் முதல் சைனாமேன்

இந்தியாவிற்காக ஆடும் முதல் சைனாமேன்

Rasus

இந்தியாவிற்காக ஆடும் முதல் சைனாமேன் பந்து வீச்சாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் குல்தீப் யாதவ்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியை ஜெயித்துள்ளதால் 1-1 என்று சமநிலையில் இருக்கும் தொடரை யார் வெல்ல போவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய டெஸ்ட் இது.

இந்த முக்கிய டெஸ்ட் போடியில், தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கும் 22 வயது இளம் வீரர் குல்தீப் யாதவ். இவர் இந்தியாவிற்காக விளையாடும் 288 வது டெஸ்ட் வீரர். இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு சைனாமேன் வகையை சாரும். இடது கையால் சுழற்பந்து வீசும் பந்து வீச்சாளரின் ரிஸ்ட் ஸ்பின் வலது கை சுழற்பந்து வீச்சாளர்களின் லெக் ஸ்பின் போல இருந்தால் அவர் சைனாமேன் என்று அழைக்கப்படுவார். இந்தியாவிற்கு விளையாடும் முதல் சைனாமேன் பந்து வீச்சாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுர் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த வருடம் 22 உள்ளுர் போட்டிகளில் விளையாடிய குல்தீப், 723 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு போட்டியில் எடுத்த அதிகபட்சமான ரன்கள் 117.

2014-ம் ஆண்டு நடந்த 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையில் முதன்முதலில் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமைக்கு உரியவர் குல்தீப். அந்த உலக கோப்பையில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎலில் குல்தீப் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.