விளையாட்டு

ஹைதராபாத் தோல்வி: பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கொல்கத்தா

ஹைதராபாத் தோல்வி: பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கொல்கத்தா

JustinDurai

ஐபிஎல்லில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 54 ரன் வித்தியாசத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. கொல்கத்தா அணி முதலில் பேட் பிடித்த நிலையில் தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும் அஜிங்க் ரகானே, நிதிஷ் ராணே, கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அணி வலுவான ஸ்கோரை குவிக்க உதவினர். பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் சரவெடி ஆட்டம் ஆடி 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன் குவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. உம்ரான் மாலிக் 3 விக்கெட் எடுத்த நிலையில் நடராஜன், புவனேஸ்வர் குமார், மார்கோ யான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியின் ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி தலா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அய்டன் மார்க்ரம் ஓரளவு சமாளித்து 32 ரன் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பேட்டிங்கில் அசத்திய ரஸ்ஸல் பந்துவீச்சிலும் 3 விக்கெட் வீழ்த்தினார். இவ்வெற்றி மூலம் கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது

இதையும் படிக்கலாம்: LBW அவுட்! நடுவருடன் கொல்கத்தா வீரர்கள் கடும் வாக்குவாதம் ! களத்தில் நடந்தது என்ன?