விளையாட்டு

3 வினாடியில் சம்மதம் சொன்னார் கோலி: சவுரவ் கங்குலி

3 வினாடியில் சம்மதம் சொன்னார் கோலி: சவுரவ் கங்குலி

webteam

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி 3 வினாடியில் சம்மதம் தெரிவித்தார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டஃபல் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு வெறும் 3 வினாடியில் விராத் கோலி சம்மதம் தெரிவித்தார்’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, அடிலெய்ட்டில் பகலிரவு டெஸ்ட்டை விராத் கோலி ஏன் மறுத்தார் என்று தெரியாது. ஆனால், பங்களாதேஷ் தொடருக்கான அணி தேர்வுக்கு முன்பாக கடந்த மாதம் 24 ஆம் தேதி கோலியை சந்தித்துப் பேசினேன். அப்போது பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவது அவசியம் என்று கூறினேன். சரி என்று மூன்றே வினாடியில் சொன்னார். டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாத மைதானத்தை பார்க்க வேண்டாம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். வாழ்க்கை மாறிவிட்டது. ஏனென்றால் சமூகம் மாறிவிட்டது. நாமும் அதற்கு தகுந்தாற்போல சில மாற்றங்களை செய்ய வேண்டும்’என்று கூறினார்.