விளையாட்டு

‘கோலியும், பாபரும் சச்சினின் ஆட்டத்தை நினைவு படுத்துகிறார்கள்’ இயன் பிஷப் 

‘கோலியும், பாபரும் சச்சினின் ஆட்டத்தை நினைவு படுத்துகிறார்கள்’ இயன் பிஷப் 

EllusamyKarthik

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் பேட்டிங் ஸ்டைல் தனக்கு சச்சினின்  ஆட்டத்தை நினைவு படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பொம்மி மபாங்வாவுடன்  இன்ஸ்டாகிராமில் பேசியபோது இயன் பிஷப் இதை சொல்லியுள்ளார்.

"விராத் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரும் ஸ்ட்ரைட் லைனில் ஆடும் போது சச்சின் டெண்டுல்கரை நினைவு படுத்துகிறார்கள். நான் பந்து வீசிய சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் ஸ்ட்ரைட் லைனில் ஆடுவார். அதை இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் செய்கிறார்கள். அது தான் சச்சினின் ஆட்டத்தை எனக்கு நினைவு படுத்த காரணம்” என தெரிவித்துள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் 2013இல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை விளாசியுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களையம் இந்தியாவுக்காக குவித்துள்ளார்.