இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நேப்பியரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்வுள்ள போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் தொடர்களை தலா 2-1 என முதன்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
உலகக் கோப்பை போட்டி 2019-க்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மைதானங்களின் தன்மை, சூழல் உடைய நியூஸிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி ஆடுகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்பியரில் 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய ஒரு நாள் அணியில் தொடக்க வரிசை ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விரோட் கோலியுடன் வலுவாக உள்ளது,
எனினும் ஷிகர் தவன் ஆட்டத்திறன் கேள்விக்குறியாக உள்ளது. 9 ஆட்டங்களில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.நியூஸிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக சிறியவையாக உள்ளன. மேலும் நியூஸி. அணியில் டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, லாக்கி பெர்குஸன் உள்ளிட்ட அபாயகரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இந்திய அணி: தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல்.
நியூசிலாந்து அணி: குப்டில், மன்ரோ, வில்லியம்சன், டெய்லர், நிக்கோல்ஸ், டாம் லேதம், மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வெல், சவுதி, பெர்கியூசன், போல்ட்.