விளையாட்டு

சொந்தமா விமானம் வாங்கலாமே: பிசிசிஐ-க்கு கபில்தேவ் யோசனை

சொந்தமா விமானம் வாங்கலாமே: பிசிசிஐ-க்கு கபில்தேவ் யோசனை

webteam

இந்திய கிரிக்கெட் வாரியம் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் யோசனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றாக பணம் வருகிறது. இந்திய அணியினரின் நேரத்தைக் குறைப்பதற்காக, சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கலாம். அவர்களால் வாங்க முடியும். இதை 5 வருடத்துக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சொந்தமாக விமானம் இருந்தால், கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். இதை 3 வருடங்களுக்கு முன்பே இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறேன். அதோடு, நட்சத்திர ஓட்டல் கட்டணத்தை குறைக்கும் பொருட்டு, முக்கியமான நகரங்களில் கெஸ்ட் அவுஸ் கட்டலாம் என்றும் சொன்னேன்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ’மேற்கத்திய நாடுகளில் விளையாட்டு வீரர்கள் சொந்தமாக விமானம் வைத்திருக்கிறார்கள். இந்திய வீரர்கள் ஏன் அப்படி வைத்துக்கொள்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட் வீரர்கள் சொந்தமாக விமானம் வாங்குவதை பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்கான காலம் வரும் என்று நம்புகிறேன்’ என்றார்.