விளையாட்டு

ஆலோசனைக்குழு தலைவர் பதவி - கபில்தேவ் திடீர் ராஜினாமா  

ஆலோசனைக்குழு தலைவர் பதவி - கபில்தேவ் திடீர் ராஜினாமா  

rajakannan

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுத் தலைவர் பதவியை முன்னாள் கேப்டன் கபில்தேவ் ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக ஆதாயம் தரும் இரட்டை பதவி குறித்து பிரச்னை சென்று கொண்டிருக்கிறது. கங்குலி, சச்சின், டிராவிட் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். டிராவிட் உள்ளிட்டோருக்கு இந்த விவகாரத்தில் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்களும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவிற்கும் அதன் தலைவர் கபில்தேவுக்கும் சமீபத்தில் இரட்டை பதவி ஆதாய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கபில் தேவ் தன்னுடைய ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், ஆலோசனைக் குழுவில் உள்ள ரங்கசாமியும் தன்னுடைய பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தார்.