தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா காயமடைந்து வெளியேறினார்.
உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டி நேற்று லண்டனில் உள்ள கென்னிங்க்டான் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அந்த 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 89 (79), கேப்டன் மார்கன் 57 (60), ஜாசன் ராய் 54 (53) மற்றும் ஜோ ரூட் 51 (59) ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர் பந்தில் காயமடைந்தார். தென் ஆப்பிரிக்கா அணி 4வது ஓவரில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது, ஆர்ச்சர் 144.8 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்தை வீசினார், அது ஆம்லாவின் தலையை கடுமையாக தாக்கியது. இதில் அப்பந்து நிலைகுலைந்த அம்லா பேட்டிங்கை தொடர முடியாமல் வெளியேறினார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அந்த 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 7 விக்கெட்டுகள் விழுந்த பின்னர் மீண்டும் களமிறங்கிய அம்லாவும் 13 (23) விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.