விளையாட்டு

"பும்ரா - ஷமியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்" - ஜோ ரூட் வேதனை

"பும்ரா - ஷமியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்" - ஜோ ரூட் வேதனை

jagadeesh

இந்திய டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியை 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. முன்னதாக இந்திய பவுலர்களான பும்ரா - ஷமி ஆகியோரை எளிதாக ஆட்டமிழக்க செய்துவிடலாம் என்ற எண்ணிய இங்கிலாந்து பவுலர்களால் அவுட்டாக்க முடியவில்லை. இதனால் இந்தியா அருமையான முன்னிலை பெற்றது. அந்த இலக்கை துரத்தி வெற்றிப்பெற முடியாமல் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.

இது குறித்து பேசிய ஜோ ரூட் "ஒரு கேப்டனாக இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் சிறப்பாக வித்தியாசமாக சிந்திக்க தவறிவிட்டேன். ஷமி, பும்ராவின் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் முக்கிய நகர்வாக கருதுகிறேன். அவர்களை அவுட்டாக்கும் விஷயத்தில் நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். அவர்களின் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் இக்கட்டான நிலைக்கு எங்களை கொண்டு சென்றுவிட்டது" என்றார்.

மேலும் பேசிய ஜோ ரூட் "இந்தியாவை ஆல் அவுட் ஆக்க முடியாதது, மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை நான் குறைத்து கணித்துவிட்டேன். அது தவறு என புரிந்துக்கொண்டேன். அவர்கள் எத்தகைய பந்தையும் எதிர்கொண்டு விளையாடும் திறன் கொண்டவர்கள் என தெரிந்தது. எங்களது பந்துவீச்சில் இன்னும் வீரியமும் விவேகமும் இருந்திருக்கலாம்" என்றார் அவர்.