விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே

இலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே

webteam

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நிராகரித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே. 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11814 ரன்னும் 448 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 12650 ரன்னும் எடுத்துள்ள, ஜெயவர்த்தனே, ஐபிஎல் தொடரில், மும்பை இண்டியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளரான அவரை, உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆலோசகர் அல்லது ஏதாவதொரு பங்களிப்பை அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

இலங்கையில் முதல்தர கிரிக்கெட்டை மேம்படுத்த, முன்னாள் கேப்டன்களான ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜெயவர்த்தனே உள்ளிட்ட குழுவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.

இதுபற்றி ஜெயவர்த்தனே கூறும்போது, ‘’இலங்கை கிரிக்கெட் வாரியம் எனக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தது. அணி தேர்வில் இருந்து எல்லாம் முடிந்துவிட்ட பின், என்னால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.