மைக் டைசன் - ஜேக் பால் முகநூல்
விளையாட்டு

58 வயதான மைக் டைசனை வீழ்த்தினார் 27 வயதான ஜேக் பால்!

அமெரிக்காவின் டெக்ஸாசில் நடந்த உலகளவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் 58 வயதான மைக் டைசனை 27 வயதான ஜேக் பால்.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவின் டெக்ஸாசில் நடந்த உலகளவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் 58 வயதான மைக் டைசனை 27 வயதான ஜேக் பால்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள AT&T ஸ்டேடியத்தில் நேற்று ( 15.11.2024) இரவு நடைபெற்றது உலக ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த மைக்சன் டைசன் மற்றும் ஜேக் பால் பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டி நடைப்பெற்றது. மொத்தமாக எட்டு சுற்றுகளை இந்த போட்டி உள்ளடக்கி இருந்தது.

தலைசிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பாராட்டினை மைக் டைசன் பெற்றிருந்தாலும், 58 வயதில் எட்டு சுற்றுகளையும் முடிக்க முடியுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இதற்காக, மூன்று நிமிடங்கள் நடைபெறும் இப்போட்டியானது 2 நிமிடங்களாக மாற்றப்பட்டது.

இரண்டு சுற்றுகளை மைக் டைசன் கடப்பாரா என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில், எட்டு சுற்றுகளையுமே கடந்தார். இருப்பினும், மைக் டைசனை பொறுத்தவரை தடுப்பாற்றலில் ஈடுபட்டதை போல, அவரால் attack செய்யமுடியவில்லை என்பதை போட்டியில் காணமுடிந்தது.

இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்து முடிந்த எட்டுச்சுற்றுகளின் முடிவில், 79 -73 என்ற புள்ளிக்கணக்கில் 58 வயதான டைசன் 27 வயதான ஜேக் பாலிடம் தோல்வியை தழுவினார்.

போட்டியின் முடிவில் இருவரும் தங்களின் அன்பை பரிமாறி கொண்டனர். அப்போது பேசிய டைசன் ’இது கடைசிப்போட்டியாக இருக்கும் என்று என்னால் கூற முடியாது.’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போட்டியில் வெற்றிப்பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களும் தோல்வி அடைந்த மைக் டைசனுக்கு 20 மில்லியன் டாலர்களும் கிடைக்கும். இந்த போட்டி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போட்டியில் வென்ற ஜேக் பால் டைசனைக் கட்டித் தழுவி உணர்ச்சி வயப்பட்டார்.

ஜேக் பாலை கன்னத்தில் அறைந்த மைக் டேக்சன்!

கடைசியாக 2005- ஆம் ஆண்டு கெவின் மைக்ப்ரைட் (KEVIN MCBRIDE) உடன் மோதிய போட்டியில் தோல்வியடைந்து, தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு விடைகொடுத்தார் மைக் டைசன். தாம் களமிறங்கிய 58 தொழில்முறை போட்டிகளில் 50 போட்டிகளில் வென்று சாதித்தவர்.

இந்தநிலையில்தான் , 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கிய மைக் டைசன்.. யூடியூபராக இருந்து பின்னர் குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பாலை எதிர்த்து போட்டியிட்டார். ஜேக் பாலை பொறுத்தவரை களமிறங்கிய 11 போட்டிகளில் பத்து போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இந்தநிலையில்தான் போட்டியும் தொடங்கியுள்ளது. போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை இரவு இருவரின் எடையும் சோதனை செய்யப்பட்டது. அப்போது நடந்த சிறிய உரையாடலின்போது, மைக் டைசன் திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார்..

இதற்கு பதிலளித்த ஜேக் பால் , ’டைசனை ரிங்கில் பார்த்துக்கொள்கிறேன் ’ என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தான் கூறியது போல போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜேக் பால், குத்துச்சண்டை ஜாம்பவானையே வீழ்த்திவிட்டார் என்ற பாராட்டினையும் மக்களிடையே பெற்று வருகிறார்.