நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் காயம் காரணமாக இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளும் கிராண்ட்ஸ்லாம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை நான்கிற்கும் சொந்தகாரரான ரோஜர் ஃபெடரர் தற்போது காயம் காரணமாக இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதிக வயதில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர். இவர் சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் தற்போது மூன்றாம் நிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், காலிறுதியில் எட்டாம் நிலை வகிக்கும் கிரிஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் வலதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஃபெடரர் போட்டியிலிருந்து விலகி உள்ளார். பிரஞ்ச் ஓபன் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஃபெடரரின் இந்த காயம் அவரது பங்கேற்பை சந்தேகப்படுத்தியுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த எமாற்றத்தை அளித்துள்ளது.