விளையாட்டு

அந்த இடத்துல அப்படி கேட்கலாமா? மித்தாலி ராஜ்

அந்த இடத்துல அப்படி கேட்கலாமா? மித்தாலி ராஜ்

webteam

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புத்தகம் வாசிப்பதால் பதற்றத்தில் இருந்து விடுபடுகிறேன்’ என்று சொன்னார்.

அவர் மேலும் கூறும்போது, ’புத்தகம் வாசிப்பது எனக்குப் பிடிக்கும். வாசிப்பதால், மனதில் அமைதி வந்துவிடுகிறது. வாசிக்கும்போது முழுவதுமாக வேறொரு உலகத்துக்குள் செல்ல முடியும். அதனால் போட்டியின் போதும் வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்படிச் செய்தால் ஆட்டத்தில் என் கவனத்தை செலுத்த முடிவதாக உணர்கிறேன்’ என்றார். 

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ‘உங்கள் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?’ என்று கேட்ட செய்தியாளரிடம் கோபமாக நடந்துகொண்டார் மித்தாலி ராஜ். ’ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்பீர்களா?’ என்று திருப்பிக் கேட்டார். அது ஏன் என்று இப்போது கேட்டபோது, ‘அது மோசமான கேள்வி இல்லைதான். ஒவ்வொருவருக்கும் பிடித்தவர்கள் என்று கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால், எதை எங்கு கேட்க வேண்டும் என்று இருக்கிறது. அது மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு. அங்கு அதுபற்றி மட்டுமே கேட்பதுதான் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு அற்பத்தனமாக கேட்பது எப்படி சரியாகும்? அதனால்தான் அப்படி நடந்துகொண்டேன்’ என்றார்.