விளையாட்டு

அஸ்வினை புகழ்ந்து தள்ளிய லக்ஷ்மன்

அஸ்வினை புகழ்ந்து தள்ளிய லக்ஷ்மன்

JustinDurai

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், ரவிசந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஆஸ்திரேலியா வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விக்கெட்டை அஸ்வின் வீழத்தியபோது, டெஸ்ட் போட்டியில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன், ரவிசந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ‘’இந்த வருடத்தில் (2020) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்துவீசி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘’ அஸ்வின் மிகத் திறமையாக பந்து வீசுகிறார். ஒவ்வொரு பந்தையும் மிகவும் நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் வீசுகிறார் அஸ்வினின் பந்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அஸ்வினுக்கு எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்று மிக தெளிவாக தெரிந்திருக்கிறது. அஸ்வின் இந்த நேரத்தில் ஸ்மித்தின் அளவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது’’ என்று அஸ்வினை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்