விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்

webteam

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் ஜெர்மனியில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் வென்றனர். இதன் மூலம் முதல் நாளிலே இந்திய சிறப்பான தொடக்கத்தை பெற்றது. 

அத்துடன் மொத்தமாக முதல் நாளில்  2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் எனப் பல பதக்கங்களை இந்தியாவென்றது. அதேபோல இரண்டாவது நாள் முடிவில் 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய முதலிடம் பெற்றது.

இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று மேலும் 3 பதக்கங்களை இந்திய பெற்றது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மெஹோலி கோஷ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 

அத்துடன் 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் பிரியா ராகவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.