விளையாட்டு

’ஹேய்..ஹேய்’ அது ஒய்டு இல்லையா? அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கத்திய ஷாகிப் அல் ஹசன்!

’ஹேய்..ஹேய்’ அது ஒய்டு இல்லையா? அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கத்திய ஷாகிப் அல் ஹசன்!

Rishan Vengai

பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில், வங்கதேச அணியின் மூத்தவீரர் ஷாகிப் அல் ஹசன் அம்பயரை பார்த்து கத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.

லெக் அம்பயரின் தவறான முடிவால், தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டிய ஷாகிப் அல் ஹசன், 'ஹேய்' என கத்திக்கொண்டே சென்று, தனது கைகளால் அது ஒயிட் பால் என அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பங்களார்தேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில், சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற பிபிஎல் போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் மற்றும் சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பார்ச்சூன் பாரிஷால் அணியில் களமிறங்கி விளையாடினார் வங்கதேச அணியின் மூத்தவீரர் ஷகிப் அல் ஹாசன். போட்டியில் 15 ஓவர் முடிவில் 140 ரன்களை எட்டியிருந்தது பார்ச்சூன் அணி. ஷகிப் அல் ஹசன் 22 பந்துகளில் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 16ஆவது ஓவரை வீசிய ரெஜவுர் ரஹ்மான் ராஜா, ஒரு ஷார்ட் பிச் பந்தை வீசினார், அது ஷகிப்பின் தலைக்கு மேல் சென்றது. ஆனால் லெக் அம்பயர், அதற்கு ஒயிட் கொடுக்காமல், ஒரு மோசமான முடிவை வழங்கினார். அதாவது ஒன் பவுன்சர் என்பதை குறிக்கும் வகையில் தன்னுடைய கையை தோளின் வைத்து சைகை செய்தார். நடுவரின் இந்த முடிவை எதிர்பாராத ஷகிப் அல் ஹாசன், நிதானத்தை இழந்து ”ஹேய் ஹேய்” என கோபமாக கத்தினார். பின்னர் அம்பயரிடமே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார், ஆனாலும் அது ஒய்டு என கொடுக்கப்படவில்லை. கம்ண்டேட்டராக இருந்தவர்களும் அதை ஒயிடு என கூறினர், ஆனால் அம்பயரிடம் செய்த அவருடைய அணுகுமுறை கேள்வி எழுப்பினர்.

#ShakibAlHasan #BPL2023 #BPL pic.twitter.com/RSFXjzTwPD
— T20 WORLD Cup 2022 (@Cricketmemes202) January 8, 2023

பொதுவாக இதுபோன்ற சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான், ஷாகிப் அல் ஹசன். 2021 ஆம் ஆண்டு நடந்த டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில், நடுவரின் முடிவில் மறுப்பு தெரிவித்து கால்களால் ஸ்டம்பை உதைத்தார் ஷாகிப் அல் ஹசன். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஆக்ரோஷமாக கத்தியபோதும், அதற்கு நடுவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. மற்றும் முடிவை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஷகிப் அடுத்த பந்து வீச்சை எதிர்கொள்ள விரக்தியுடன் திரும்பிச் சென்றார்.

அவருடைய அதிருப்தியை வெளிக்காட்டிய பின்னர், கோபத்தை பேட்டிங்கில் வெளிக்காட்டிய அவர், அதிரடியான ஆட்டத்தால் அவருடைய அணியை 194 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். 26 பந்துகளில் அரைசதமடித்த ஷாகிப், போட்டியின் முடிவில் 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 67 ரன்களை சேர்த்தார். இருப்பினும் இந்தப் போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் தோல்வியை தழுவியது. சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர்களில் 196 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.

ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது.