விளையாட்டு

டெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த்

டெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த்

rajakannan

இந்திய அணியில் ஏழாவது வீரராக டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்களை இஷாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார். சவுதாம்டனில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ரூட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை 250 விக்கெட்கள் வீழ்த்திய 3வது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாதான். சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடி, 250 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர்தான். அதாவது 86 போட்டிகளில் விளையாடி மிகவும் மெதுவாக 250 விக்கெட் எடுத்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் 121 போட்டிகளில் விளையாடி 250 விக்கெட்கள் எடுத்தார். இஷாந்த் சர்மாவுக்கு அடுத்தபடியாக, நியூசிலாந்து அணியில் டேனியல் விட்டோரி 81 போட்டிகளில் 250 விக்கெட் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார்.