விளையாட்டு

பிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா?

பிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா?

EllusamyKarthik

உலகிலேயே அதிகளவிலான பணம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்று ஐபிஎல். உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடரும் கூட. 

அதே போல தான் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் (பிஎஸ்எல்) தொடரும் கூட. ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு தொடர்களையும் ஆவலோடு பார்க்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் தான் இருந்து வருகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன்களாக விளையாடுகின்ற வீரர்களின் சம்பளம் எவ்வளவு? ஒரு ஒப்பீடு.

கோலி VS ஷதாப் கான் 

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை கடந்த 2013 சீஸனில் இருந்து வழிநடத்தி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. ஆனால், இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

இருப்பினும் கடந்த 2018 ஏலத்தின் போது கோலியை 17 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது ஆர்சிபி. 

மறுபக்கம் பிஎஸ்எல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இஸ்லாமாபாத் யுனைடட் அணியின் கேப்டன் ஷதாப் கான் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2019 சீசனில் ஷதாப் அணியை புள்ளி பட்டியலில் மூன்றாவது அணியாக இடம் பிடிக்க செய்தார். 

தோனி VS சர்பராஸ் கான்

ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் சென்னை அணியின் தோனி. மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று  கொடுத்துள்ளார். அதோடு ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் சென்னை அணியை ஆதிக்கம் செலுத்தும் அணியாகவும் உருவாக்கினார். சென்னை அணிக்காக விளையாட தோனி 15 கோடி ரூபாய்க்கு கான்ட்ரக்ட் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தோனி அளவுக்கு இல்லை என்றாலும் பிஎஸ்எல் தொடரில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியை வழிநடத்தும் சர்பராஸ் கான் அவரது அணியை நான்கு முறை பிளே ஆப் சுற்றுக்குள்ளும், ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். அவர் ஒரு கோடி ரூபாய்க்கு கான்ட்ரக்ட் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரோகித் ஷர்மா VS வாஹப் ரியாஸ் 

மும்பை அணியை நான்கு முறை சாம்பியனாக்கிய ஹிட்மேன் ரோகித் ஷர்மா. மும்பைக்காக விளையாட 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். 

மறுபக்கம் பெஷாவர் ஜால்மி அணிக்காக கேப்டனாக விளையாடும் வாஹப் ரியாஸ் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். 

வார்னர் VS இமாத் வாசீம் 

ஹைதராபாத் அணிக்காக கேப்டனாக விளையாடும் டேவிட் வார்னர் 12 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடும் இமாத் வாசீம் 50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதே போல பஞ்சாப் அணிக்காக கேப்டனாக உள்ள கே.எல் ராகுல் 11 கோடி ரூபாய்க்கும், பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் அணிக்காக விளையாடும் டேரன் சம்மி 40 லட்ச ரூபாய்க்கும் விளையாடி வருகின்றனர்.