விளையாட்டு

ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க போவது யார்? பஞ்சாப் அணிக்கு 187 ரன் இலக்கு

webteam

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி இலக்காக 187 ரன்களை நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஐபிஎல் 50-வது ‘லீக்’ போட்டியில் இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன் படி மும்பை அணியின் தொடக்க வீரராக சூர்யகுமார் யாதவ் மற்றும் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 37 ரன்களாக இருந்த போது லீவிஸ்  9 ரன்களில் வெளியேறினார். அடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்தார். ஆண்ட்ரூடையின் 5வது ஓவரின் மூன்றாவது பந்தில் இஷான் கிஷான் 20 ரன்களில் நடையைக் கட்டினார்.

அதன் பின் வந்த கேப்டன் ரோகித் சர்மாவும் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 8.2 ஓவரில் 71 ரன்கள் எடுத்த நிலையில் முன்னணி வீரர்களை இழந்து மும்பை அணி தடுமாறியது. அச்சமத்தில் கடந்த சில போட்டியில் விளையாடமல் இருந்த பொல்லர்ட், குர்ணால் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடிய பொல்லர்ட் 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணி சார்பில் அன்கிட் ராஜ்புட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.