விளையாட்டு

பிளாஷ்பேக்: ஐபிஎல்-லில் குறைந்த ரன்னில் சுருண்ட அணிகள்!

பிளாஷ்பேக்: ஐபிஎல்-லில் குறைந்த ரன்னில் சுருண்ட அணிகள்!

webteam


சாதனைக்கும் சோதனைக்கும் பஞ்சமில்லாதது கிரிக்கெட். எந்தளவுக்கு சிக்சர்கள் பறந்து ரன்கள் குவிகிறதோ, அந்தளவுக்கு விக்கெட்டையும் இழந்து கொலாப்ஸ் ஆவதும் சகஜம். அந்த வகையில் ஐபிஎல் தொடரிலும் பல ரெக்கார்ட்கள் அப்படியும் இப்படியும் இருக்கின்றன. அதில் குறைந்த ஸ்கோர் பெற்ற அணிகள் பற்றி விவரம் இங்கே:

1.விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி, 49 ரன்களில் சுருண்டதுதான், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர்! கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி இது. கொல்கத்தாவின் கோல்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், கிராண்ட் ஹோம் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுதான் இதற்கு காரணம்.

2. தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் திருவிழா அது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் 58 ரன்களில் வீழ்ந்தது, ராஜஸ்தான் ராயல்ஸ்! காரணம் அணில் கும்ளேவில் அனல் சுழல். வெறும் 5 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார் அவர்.

3. மும்பைக்கு எதிராக 2008-ல், 67 ரன்களுக்குள் கொல்கத்தா சுருண்டது, ஐபிஎல்-லின் அடுத்த குறைந்தப் பட்ச ஸ்கோர். மும்பையின் ஷான் பொல்லாக், 12 ரன்களை கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை சிதைத்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

4. 2011-ல் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக கொச்சி டஸ்கர் எடுத்த ரன்கள் 74. இஷாந்த் சர்மாவின் துல்லியமான பந்து வீச் சில் டஸ்கர் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 12 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தி னார் சர்மா.

5. மும்பைக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே 79 ரன்கள் வீழ்ந்தது, ஐபிஎல்-லில் அடுத்த குறைந்த பட்ச ஸ்கோர். சிஎஸ்கேவில் டாப் ஆர்டரை கபளீகரன் செய்தது மைக்கேல் ஜான்சன்.

6. இதுவும் பெங்களூர்தான். 82 ரன்களில் சுருண்டது கொல்கத்தாவுக்கு எதிராக. கொல்கத்தாவின் மெக்குலம் 158 ரன்கள் விளாசி நிலைகுலைய வைத்தால் என்ன செய்ய முடியும்? 

7. பெங்களூருக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ், 82 ரன்கள் எடுத்து தோற்றது 2010-ல். இதுவும் ஐபிஎல்-லின் குறைந்த ஸ்கோர்.

8. 2011-ல் மும்பை இண்டியஸ் அணியை 87 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது, பஞ்சாப் அணி. அதிக அறிமுகமில்லாத பார்கவ் பட் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இந்தப் போட்டியின் திருப்பம்.

9. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக, டெல்லி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் 80 !

10. சென்னைக்கு எதிராக பஞ்சாப் எடுத்த குறைந்த பட்ச ஸ்கோர் 92. 2009-ல் நடந்த போட்டியில் பஞ்சாப்பை பஞ்சராக்கியது சென்னை.

கேலரி: