கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது பிசிசிஐ.
பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி நடக்கிறது இந்த தொடர்.
தற்போது வீரர்கள் அனைவரும் பயோ பபுள் என சொல்லப்படும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கைகுலுக்குவதற்கு நோ, விக்கெட் விழுந்தால் கட்டிப்பிடித்து கொண்டாட நோ, ஹைஃவை சொல்ல நோ என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதை கச்சிதமாக பின்பற்றிய சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் விளையாடினர்.
விக்கெட் விழும் போதும், ஆட்டம் முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்குவதற்கு மாற்றாக விரலை மடக்கி பஞ்ச் செய்து கொண்டனர்.
ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற போஸ்ட் மேட்ச் பிரசெண்டேஷன் செரிமணியிலும் கமன்டேட்டர் மற்றும் வீரர்களுக்கு இடையே ஆறு அடி இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் அவர்களுக்கான பரிசு தொகையை அவர்களே எடுத்துக் கொண்டனர்.
அடுத்தடுத்து நடக்க உள்ள இந்த தொடரின் மற்ற போட்டிகளிலும் இதே நடைமுறையை வீரர்கள் கடைபிடிக்க உள்ளனர்.