விளையாட்டு

ஐபிஎல் விறுவிறு ஏலம் : விலை போகாத இந்திய வீரர்கள்

rajakannan

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ15.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. 

வெளிநாட்டு வீரர்கள் பலரும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய வீரர்கள் பலரும் ஏலம் போகவில்லை. குறிப்பாக, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஹனுமா விஹாரி, புஜாரா ஆகியோர் ஏலம் போகவில்லை. அதேபோல், யூசப் பதான், ஸ்வர்ட் பின்னி உள்ளிட்டோரும் ஏலம் போகவில்லை. இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

சில வீரர்களின் ஏல விவரம்:

பேட் கம்மின்ஸ் - ரூ15.5 கோடி(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
மேக்ஸ்வெல்   - ரூ10.75 கோடி(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
கிறிஸ் மோரிஸ் - ரூ10 கோடி (ராயல் சேலஞ்ச் பெங்களூரு)
சாம் கர்ரன்      - ரூ5.50 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
இயன் மார்கன் - ரூ5.25 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ஆரோன் பின்ச் - ரூ4.40 கோடி (ராயல் சேலஞ்ச் பெங்களூரு)