விளையாட்டு

“ஆமாம், வீரர்களை திட்டினேன்” - தினேஷ் கார்த்திக் கடுகடு

“ஆமாம், வீரர்களை திட்டினேன்” - தினேஷ் கார்த்திக் கடுகடு

webteam

வீரர்களை திட்டினால்தான் விளையாடுவார்கள் என்றால் அதையும் செய்யலாம் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 52 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. ஆனால் பின்னர் நிதானித்து ஆடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. 

இதனிடையே பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களிடமும் ஃபீல்டர்களிடமும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். இது மைதானத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. 

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 49 பந்தில் 65 ரன்னுடனும் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக்கிடம் வீரர்களை திட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ஆம், வீரர்களை திட்டினேன். ஃபீல்டர்களும் பந்துவீச்சாளர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை. எங்கள் வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பும் முடிவும் கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதையும் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.