இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று லீட்ஸில் உள்ள ஹேட்டிங்க்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார்.
ரோகித் ஷர்மாவிற்கு விக்கெட்டுக்குப் பிறகு இறங்கிய கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. தற்போது 257 என்ற இலக்கை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை விளையாடி வருகிறது.