- இந்திய அணியின் 11 பேர் பட்டியலில் விஜய் சங்கர் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தார்.
- 10 ஓவரில் ஹர்திக் வீசிய பந்து ஜாசன் கைகளை உறசி தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால் அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை.தோனியும் ரிவீவ் கேட்கவில்லை.
- முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தபோதிலும், 10 ஓவர்களில் 69 ரன்கள் வாரிக்கொடுத்தார்.
- உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர் என்ற வருத்தத்திற்குரிய சாதனையை சாஹல் படைத்தார். 10 ஓவர்களில் 88 ரன்கள்.
- தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி சொதப்பினார்.
- ரோகித் ஷர்மா நிதானமாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது ஒரு கேட்சை அதில் ரஷித் தவறவிட்டார்.
- இளம் வீரர் ரிஷாப் பண்ட் தனது முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடினார். 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
- 45வது ஓவர் முதல் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியை காட்டாமல் சிங்கில்களை அடித்தனர். 5 ஓவர்களில் அவர்கள் 39 ரன்களை சேர்த்தனர்.
- தோனி ஏன் அடித்து ஆடவில்லை ? தோல்விக்கு அவரே காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
- நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்தது.