விளையாட்டு

2007 உலகக் கோப்பை தோல்விக்குக் காரணம் என்ன?... முதன்முறையாக மனம்திறந்த சச்சின்

2007 உலகக் கோப்பை தோல்விக்குக் காரணம் என்ன?... முதன்முறையாக மனம்திறந்த சச்சின்

webteam

உலகக்கோப்பை தொடர்களைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த இந்திய அணிக்கு, 2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர் படுமோசமாக அமைந்தது.

ராகுல் டிராவிட் தலைமையில் அந்த உலகக்கோப்பை தொடரில் கலந்துகொண்ட இந்திய அணி, லீக் சுற்றோடு வெளியேறியது. இலங்கை, வங்கதேசம் மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் இருந்த குழுவில் இந்திய அணி இடம்பெற்றிருந்தது. இலங்கையுடனான போட்டியில் தோற்ற இந்திய அணி, வங்கதேசத்திடமும் தோற்று தொடரிலிருந்தே வெளியேறியது. பெர்முடா அணியை மட்டுமே வீழ்த்தியது. 

சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் குறித்து சச்சின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் செப்பல், தொடருக்கு ஒரு மாதம் முன்பாக ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அந்த மாற்றங்கள் அணியை வெகுவாக பாதித்தது. உலகக் கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் புறப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்திடம் இதுகுறித்து தெளிவாக எடுத்துரைத்தேன் என்று சச்சின் கூறியுள்ளார். சச்சினின் வாழ்க்கை வரலாற்று படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.