விளையாட்டு

“3 - 4 மாதம் என்னதான் செய்தீர்கள்?” - வருண் சக்கரவர்த்திக்கு ஹேமங் பதானி கேள்வி

“3 - 4 மாதம் என்னதான் செய்தீர்கள்?” - வருண் சக்கரவர்த்திக்கு ஹேமங் பதானி கேள்வி

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் தேர்வாகியிருந்தர். இருந்தாலும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தினால் வருண் இந்த தொடரை மிஸ் செய்துள்ளார். 

இந்நிலையில், இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரர் ஹேமங் பதானி வருணை விமர்சித்துள்ளார். 

“மூன்று, நான்கு மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தீர்கள். அந்த சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முன்கூட்டியே உங்களை நீங்கள் தயார்படுத்தி கொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வாகியிருந்த வருண் காயம் காரணமாக அதிலிருந்து விலகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.