விளையாட்டு

“தோனி பேட்டிங்கை பார்த்து திகைத்துப்போனேன்” - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

“தோனி பேட்டிங்கை பார்த்து திகைத்துப்போனேன்” - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

webteam

தோனியின் பேட்டிங்கை முதல் முறை பார்த்தபோதே திகைத்துப்போனதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தை பேசிவிடுகின்றனர்.

அந்த வகையில் ஃபேஸ்புக் நேரலை மூலம் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொகுப்பு நிகழ்ச்சி ஒன்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேக் சேப்பலிடம் தோனி குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தோனியின் பேட்டிங்கை முதல்முறை கண்ட போதே திகைத்துப்போனாதாக தெரிவித்தார். அத்துடன் அப்போதைய காலகத்தில் இந்திய அணியிக்கு ஒரு திறமையான பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டதாக நினைத்ததாகவும் கூறினார்.

அத்துடன், “இலங்கைக்கு எதிரான எதிரான போட்டியில் தோனி அதிரடி 183 ரன்களை குவித்தது என நினைவிருக்கிறது. அது ஒரு மிகவும் அதிரடியான பேட்டிங். முதல்முறை அவரது பேட்டிங்கை கண்டபோதே நான் திகைத்துப்போனேன். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அவர் பந்துகளை சரியான திசைகள் பார்த்தெல்லாம் அடிக்கவில்லை. அவர் நான் கண்டவரை இந்திய அணியில் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் தோனி தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.