உள்ளூர் கிரிக்கெட் போட்டியான சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போலவே அவரது பாணியை பின்பற்றி ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தியுள்ளார் பரோடா அணியின் பேட்ஸ்மேன் விஷ்ணு சோலங்கி. தமிழக அணியும், பரோடா அணியும் மோதிய இந்த தொடருக்கான இறுதி ஆட்டத்தில் கூட ஹெலிகாப்டர் ஷாட் ஆடி பந்தை சிக்சருக்கு விரட்டியிருந்தார் விஷ்ணு.
இறுதி போட்டியில் 36 ரன்களுக்கு எல்லாம் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணி 120 ரன்கள் எடுக்க முக்கிய காரணமே விஷ்ணுவின் ஆட்டம் தான் காரணம். 55 பந்துகளில் 49 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் அந்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரும் அடங்கும். அதே போல காலிறுதி போட்டியிலும் விஷ்ணு ஹெலிகாப்டர் ஷாட் ஆடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மொத்தமாக 8 இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் 267 ரன்களை எடுத்துள்ளார்.
அவரை ரசிகர்கள் வெகுவாக ட்விட்டர் மாதிரியான சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.