விளையாட்டு

தென்னாப்ரிக்க தொடருக்காக தீவிரப் பயிற்சியில் இந்திய அணி!

webteam

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. 

தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்ரிக்காவில் இதுவரை ஒரு தொடரைக்கூட இந்திய அணி வென்றதில்லை. எனவே இந்த முறை தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. அத்துடன் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் தொடரை வெற்றி பெற வேண்டும் என விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், கேப் டவுனில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது.

அதற்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிக்கர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.