விளையாட்டு

ரிப்ளை பண்ணாத சாக்‌ஷி.. துரத்தி துரத்தி காதலித்த தோனி.. 14 வருட லவ் ஸ்டோரி!

ரிப்ளை பண்ணாத சாக்‌ஷி.. துரத்தி துரத்தி காதலித்த தோனி.. 14 வருட லவ் ஸ்டோரி!

ச. முத்துகிருஷ்ணன்

கோப்பையை வென்று வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, குடும்பத்துடன் குதூகலித்து கொண்டிருப்பார் தோனி என்பதே அவருக்கு குடும்பம் எவ்வளவு நெருக்கம் என்பதற்கான ஆதாரம்.

மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் 12 வது வருட திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டன் தோனி தனது காதலி சாக்ஷியை 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று டேராடூனில் திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் தோனியின் விளையாட்டு, அரசியல் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியை ஆசிர்வதித்தனர். திருமணத்திற்கு முன்பு வரை பெரும்பாலானோருக்கு சாக்‌ஷி யாரென்று தெரியாது. அவர்களுக்குள் காதல் மலர்ந்த கதையும் பலருக்கு தெரியாது. அந்த காதல் கதை இதோ! 

தோனி மற்றும் சாக்‌ஷி இருவரும் குடும்ப நண்பர்கள்தான்!

தோனியும் சாக்ஷியும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். இருவரது குடும்பமும் நெருக்கமான நட்பில் இருந்தவையே! ஏனெனில் இருவரின் தந்தையரகளும் ராஞ்சியின் மெக்கான் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். தோனியும் சாக்ஷியும் ராஞ்சியில் உள்ள ஒரே பள்ளியில் படித்தனர். ஆனால் சாக்ஷியின் குடும்பம் அவள் குழந்தையாக இருக்கும் போதே டேராடூனுக்கு இடம் மாறியது.

சாக்‌ஷிடேராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு அவுரங்காபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஹோட்டல் நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். தோனி, சாக்‌ஷிஇருவரும் பல ஆண்டுகளாக தொடர்பை இழந்திருந்தனர். தோனி குறித்து பல விஷயங்களை சாக்‌ஷி மறந்திருந்த போதும் இருவரும் மீண்டும் சந்திக்கும் சூழல் அமைந்தது.

தோனி சாக்‌ஷியின் மறுசந்திப்பு!

கொல்கத்தாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்தனர். கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் நகரில் இந்திய அணி போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக தங்கியிருந்தபோது இந்த சந்திப்பு நடந்தது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவியான சாக்ஷி, இந்திய அணி தங்கியிருந்த போது, தாஜ் பெங்கால் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்தார்.

“அவர் மிகவும் சாதாரண மனிதராகத் தோன்றினார். நான் அந்த நேரத்தில் கிரிக்கெட்டைப் பார்க்கவில்லை. ஒரு சாதாரண மனிதராகத் தான் தெரிந்தார். நீண்ட முடி உடைய ஒரு ஹல்க் மாதிரி இருந்தார்.” என்று பின்னாளில் அளித்த பேட்டியில் தோனி குறித்து சாக்‌ஷி தெரிவித்து இருந்தார்.

பயிற்சியின் கடைசி நாளில், சாக்ஷியின் மேலாளர் யுதாஜித் தத்தா அவளை தோனிக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்த மாத்திரத்திலேயே சாக்‌ஷியை காதலிக்க துவங்கினார் தோனி. பின்னர் தோனி மேலாளர் தத்தாவிடம் சாக்‌ஷியின் எண்ணை கேட்டு மெசேஜ் அனுப்பினார் தோனி.

மலர்ந்தது காதல்!

சாக்‌ஷியின் எண்ணைப் பெற்ற பிறகு, தோனி சாக்ஷிக்கு பல குறுஞ்செய்திகளை அனுப்பினார். ஆனால் முதலில் சாக்‌ஷிஅவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், தோனி பலமுறை மெசேஜ் பாக்ஸை நிரப்ப, சாக்‌ஷியும்வ் மெசேஜில் பேசத் துவங்கியுள்ளார். அவருக்கும் தோனியை பிடிக்கவே இருவரும் இறுதியாக மார்ச் 2008 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தோனியின் பிறந்தநாள் விழாவில் சாக்ஷியும் கலந்து கொண்டார். பொதுவெளியில் சாக்‌ஷிதோனியுடன் தோன்றிய முதல் நிகழ்வு அதுவே! இருப்பினும் இருவரும் தங்கள் உறவை ஒரு தனிப்பட்ட விவகாரமாக வைத்திருந்தனர். பலருக்கு தோனியின் காதல் குறித்து தெரிந்தாலும் சாக்‌ஷியார் என்று தெரியாத அளவுக்கு அதை ரகசியமாக வைத்திருந்தார் தோனி.

டேராடூனில் திருமணம்:

தோனியும் சாக்ஷியும் ஜூலை 4, 2010 அன்று டேராடூனில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் தோனியின் விளையாட்டு, அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது தான் பல ஊடகங்களுக்கும் பெரும்பாலான ரசிகர்களுக்கு சாக்‌ஷிஅறிமுகமானார். அதுவரை பொதுவெளியில் அறியப்படாத நபராகவே இருந்தார் சாக்‌ஷி.

திருமணத்திற்கு பின்னர் சாக்‌ஷி ஸ்டேடியத்தில் வழக்கமாக வருகை புரிந்து வருகிறார். கணவரை உற்சாகப்படுத்த முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் தவறாமல் மைதானம் வருவார். தோனியும் போட்டி முடிந்தபின் மனைவி இருக்கும் திசை நோக்கியே செல்வார். குடும்பத்துடன் நேரம் செலவிடுவதிலும் அவரை முன்மாதிரியாக குறிப்பிடலாம்!

மகளின் வருகை:

தோனி மற்றும் சாக்‌ஷி ஜோடிக்கு பிப்ரவரி 6, 2015 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்த தேவதை பெயர் ஜிவா தோனி. ராஞ்சியில் பிறந்த ஜிவா தற்போது நாட்டில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக இருக்கிறார். தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றதால் ஜிவா பிறக்கும் போது தோனி அவளுடன் இருக்க முடியாமல் போனது.

குடும்பத்துடன் எப்போதும் நெருக்கம் காட்டும் தோனி!

திருமணத்திற்கு பின் மனைவியுடன் மைதானங்களில் வலம் வந்த தோனி, ஜிவா வருகைக்கு பின் மூவர் கூட்டணியாக மைதானங்களில் தோன்றுவார். கோப்பையை வென்று வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, குடும்பத்துடன் குதூகலித்து கொண்டிருப்பார் தோனி என்பதே அவருக்கு குடும்பம் எவ்வளவு நெருக்கம் என்பதற்கான ஆதாரம்.

முன்பைவிட தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் தங்கள் குடும்பத்தை மைதானத்திற்கு அழைத்து வருதற்கு தோனியும் அவரது குடும்பமும் மிக முக்கிய காரணம் ஆகும். அந்த ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகிறது. இன்னும் பல வருடங்கள் இன்புற்று வாழ வாழ்த்துகள் தோனி - சாக்‌ஷி!

இன்று திருமண விழா கொண்டாடும் தோனிக்கு ஜூலை 7 அன்று பிறந்த நாள். அதை சிறப்பிக்கும் விதமாக ஜூலை 1 முதல் புதிய தலைமுறை இணையதளத்தில் தொடர்ச்சியாக கட்டுரை வெளியாகி வருகிறது.

முந்தைய கட்டுரைகள்: