“Catches Win Matches” என்பது கிரிக்கெட் விளையாட்டின் பொன்மொழிகளில் ஒன்று. அது நிஜமும் கூட. அந்த வகையில் பார்த்தால் இந்திய அணியின் சரிவுக்கு அண்மைய காலமாக ஃபீல்டிங்கில் கேட்ச்களை பிடிக்காமல் கோட்டை விடுவதே காரணம் எனத் தெரிகிறது. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மட்டும் ஆறு இன்னிங்ஸில் மொத்தமாக ஒன்பது கேட்ச்களை விட்டுள்ளது இந்திய அணி.
அதிலும் தற்போது நடைபெற்று வரும் சிட்னி டெஸ்டில் நான்கு கேட்ச்களை இந்திய வீரர்கள் நழுவ விட்டுள்ளனர். முதல் இன்னிங்ஸில் பண்ட் இரண்டு கேட்ச் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் மற்றும் விஹாரி தலா ஒரு கேட்ச்களை விட்டுள்ளனர். இதனால் ஆட்டமே இப்போது மாறியுள்ளது.
குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவின் ஓவர்களில்தான் இந்த கேட்ச்கள் கோட்டை விடப்பட்டுள்ளன. தனது பந்துவீச்சில் வரும் கேட்சை சக வீரர்கள் டிராப் செய்யும்போது சிரிப்பு மட்டுமே அவரது ரிப்ளையாக உள்ளது.
அதேபோல ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என ஆஸ்திரேலிய தொடரில் மட்டுமே இதுவரை இந்திய வீரர்கள் 22 கேட்ச்களை டிராப் செய்துள்ளனர்.