விளையாட்டு

ஸ்கார்ஃப், ப்ரகா அணிந்து செஸ் விளையாடனுமா ? போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை

webteam

ஈரானில் நடைபெறும் அணிகளுக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என செஸ் வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

இந்திய செஸ் வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தலையில் ஸ்கார்ஃபோ, பர்காவோ கட்டாயத்தின் பேரில் அணிந்துகொண்டு போட்டியில் கலந்துகொள்ள தமக்கு விருப்பமில்லை என அவர் பதிவிட்டுள்ளார். ஈரானின் நிபந்தனை தமது பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் 5வது இடத்திலும், உலக அளவில் 97வது இடத்திலும் உள்ள சவுமியா சுவாமிநாதன், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்போது வீரர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை கருத்தில் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.

முதலில் வங்கதேசத்தில் நடைபெறவிருந்த போட்டி பின்னர் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் சவுமியா சுவாமிநாதன் போட்டியிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.