விளையாட்டு

தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

webteam

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரா‌ன முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணி இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி சூரத்தில் நேற்று நடைபெற்றது.


 
இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.  இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அதிர‌டியாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு1‌30 ரன்கள் எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மிக்னான் டூ ப்ரீச் மட்டும் நிலைத்து நின்று ஆடி 59 ரன்கள் எடுத்தார்‌. மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19.5 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது. மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா, ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.