இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அந்த தொடர் 2-2 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. இந்திய அணி வீரர் விராட் கோலி காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் 3-வது இடத்தில் களமிறங்குகிறார்.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், கேப்டன்), லியம் விலிங்ஸ்டன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லே, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லே