விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

webteam

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.