விளையாட்டு

207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா ?

207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா ?

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்த கேப்டன் கோலி முக்கிய காரணம். அதேசமயம் ராகுலை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. இதுதவிர வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

208 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து வெற்றி பெற்ற போதிலும், 207 ரன்களை வாரிக்கொடுத்ததை பயிற்சியாளர்கள் மற்றும் தலைமை ஆலோசித்துள்ளனர். இதனால் அணியின் பந்துவீச்சில் மாற்றம் செய்ய வேண்டுமா ? எனவும் பேசப்பட்டிருக்கிறது. முகமத் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை அணிக்குள் கொண்டுவருவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிகிறது. 

இருப்பினும் இந்தப் போட்டியில் எப்படி பந்துவீசுகின்றனர் ? என்பதை பார்த்த பின்னர் அணியின் பவுலர்களை மாற்றுவது குறித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் மாற்றம் இருப்பது குறைவது எனப்படுகிறது. அதேசமயம் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கும் இடமிருக்காது என தெரிகிறது.