விளையாட்டு

இந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்

இந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்

rajakannan

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பு ஏதுமின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும், ரோகித் 115 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் விளாசினார். அவர் 204 பந்துகளை சந்தித்து இரண்டு சிக்சர், 13 பவுண்டரி உதவியுடன் இந்தச் சதத்தை அடித்தார்.

பின்னர் அடித்து ஆடத் தொடங்கிய ரோகித் சர்மா, கேசவ் மகராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் டி காக்-கால் ஸ்டம்ப்ட் செய்யப் பட்டார். ரோகித் 176 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த புஜாரா(6), விராட் கோலி(20), ரகானே(15) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 371 பந்துகளில் 215 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த விஹாரி 10, சாஹா 21 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். ஜடேஜா 30, அஸ்வின் ஒரு ரன்னுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.