விளையாட்டு

6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம் !

jagadeesh

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.

நியூசிலாந்து நிர்ணயித்த 274 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக ஆடி வரும் இந்தியா 30 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீரர்கள் குப்தில் 79 ரன்களும், ராஸ் டெய்லர் 73 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா அதிரடியாக விளையாடினார், ஆனால் 24 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 3 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக 52 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

இந்திய அணி தற்போது 30 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்து வெற்றிக்காக போராடி வருகிறது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் களத்தில் இருக்கிறார்.