விளையாட்டு

அப்ப அமித் மிஸ்ரா, இப்ப குல்தீப், சாஹல்: நியூசி. கேப்டனின் ஸ்பின் பேச்சு

அப்ப அமித் மிஸ்ரா, இப்ப குல்தீப், சாஹல்: நியூசி. கேப்டனின் ஸ்பின் பேச்சு

webteam

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த அணிகளுக்கு இடையேயான, முதல் ஒரு நாள் போட்டி வரும் 22- ஆம் தேதி மும்பையில் நடக்கிறது.

இது தொடர்பாக நியூசிலாந்து கேப்டன் கேனே வில்லியம்சன் கூறும்போது, ‘இங்குள்ள பிட்ச், இந்திய தன்மைக்கு ஏற்பதான் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்திய வெப்பத்தை தாங்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பே இங்கு வந்து வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது நல்லது. நடக்க இருக்கிற பயிற்சி ஆட்டங்கள் எங்களுக்கு முக்கியம். 
எங்கள் அணியிலுள்ள பல வீரர்கள் இங்கு ஐபிஎல் போட்டிகளில் ஆடியவர்கள் என்பதால் பிரச்னை இல்லை. சுழல்பந்துவீச்சு பற்றி கேட்கிறார்கள். கடந்த முறை இந்தியாவில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது, எங்களுக்கு அமித் மிஸ்ரா கடும் சவாலாக இருந்தார். அவர் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்போது சாஹலும் குல்தீப்பும் இருக்கிறார்கள். இவர்களுடன் ஐபிஎல் போட்டியில் எங்கள் வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் சவாலை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறோம்’ என்றார்.