விளையாட்டு

முதல் டி20 : இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

முதல் டி20 : இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

webteam

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தவான் 41 (42) ரன்கள் எடுத்தார். ரிஷாப் பந்த் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். சவுமியா சர்கார் 39 (35) ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.