விளையாட்டு

மீண்டும் சதம் அடித்த கவாஜா - அடுத்தடுத்து விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா

மீண்டும் சதம் அடித்த கவாஜா - அடுத்தடுத்து விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா

webteam

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இப்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருக்கிறது. 
இந்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆரோன் பின்ச் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 

ஆனாலும், கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விளையாடிவந்த காவாஜா இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அத்துடன் ஒருநாள் போட்டியில் தனது 2ஆவது சதத்தை அடித்தார். அதன்பின்னர் காவஜா 100 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். ஏற்கெனவே 3வது ஒருநாள் போட்டியில் காவாஜா சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தார். அதேபோல நான்காவது ஒருநாள் போட்டியில் அசத்தலாக விளையாடிய இவர் 91 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து களமிறங்கிய ஹேண்டஸ்கோம்ப் மறுபடியும் தன்னுடைய அசத்தலான ஆட்டத்தால் அரைசதம் கடந்தார். அதன்பிறகு சமியிடம் ஹண்டஸ்கொம்ப் (52)விக்கெட்டை பறிகொடுத்தார். மேலும் மெக்ஸ்வேல் 1 ரன் மட்டும் எடுத்திருந்த போது ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்த டர்னர் களமிறங்கினர். வந்த வேகத்தில் முதல் பந்திலே பவுண்டரி அடித்து மிரட்டினர். அடுத்தடுத்து சீரான வேகத்தில் ரன்களை சேர்ந்த அவர் குல்தீப் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.