விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: 10 மீ ஏர் பிஸ்டலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: 10 மீ ஏர் பிஸ்டலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

JustinDurai
டோக்கியோ பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாராலிம்பிக்ஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இது பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.