விளையாட்டு

வெற்றி பெறுமா இந்தியா ? 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து..!

வெற்றி பெறுமா இந்தியா ? 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து..!

jagadeesh

இந்திய அணிக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் குப்திலும், நிக்கோல்ஸும் களமிறங்கினர். இருவரும் மிகவும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து அணி 93 ரன்கள் சேர்த்திருந்தபோது சாஹல் பந்துவீச்சில் நிக்கோல்ஸ் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ரன் வேகத்தை அதிகப்படுத்தினார் குப்தில். அப்போது இந்திய அணியின் சிறப்பான பீல்டிங் காரணமாக குப்தில் 79 ரன்களுக்கு ரன் அவுட்டானார்.

நியூசிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்களான டால் பிளண்டல், ஜிம்மி நீஷம், லேத்தம், கிராண்ட் ஹோம், சாப்மேன், சவுத்தி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து அனுபவமிக்க ராஸ் டெய்லர் மட்டுமே பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 273 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ராஸ் டெய்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 73 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கவுள்ளனர்.