விளையாட்டு

ஈட்டி எறிதல் தரவரிசை: உலகளவில் 2ஆம் இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் தரவரிசை: உலகளவில் 2ஆம் இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

jagadeesh

ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உலக தரவரிசையில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்காக தன்வசப்படித்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈட்டி எறிதல் தரவரிசையிலும் நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார். உலகத் தரவரிசையில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.