விளையாட்டு

சச்சின், யுவராஜ் சிங் அசத்தல்: இறுதிக்குள் நுழைந்த இந்திய லெஜண்ட்ஸ் அணி!

சச்சின், யுவராஜ் சிங் அசத்தல்: இறுதிக்குள் நுழைந்த இந்திய லெஜண்ட்ஸ் அணி!

jagadeesh

ரோட் சேஃப்டி டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை 12 ரன்களில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது இந்திய லெஜண்ட்ஸ் அணி.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் கேப்டன் பிரையன் லாரா. முதலில் பேட் செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்திய லெஜண்ட்ஸ் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது வழக்கமான மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சில் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசினார். இது இவரது தொடர்ச்சியான 2வது அரைசதமாகும்.

கடந்தப் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸுக்கு எதிராக 37 பந்துகளில் 60 ரன்கள் விளாசியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். யுவராஜ் சிங் 20 பந்துகளில் 1 பவுண்டரி 6 இமாலய சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நர்சிங் தியோநரைன் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார்.

பின்பு களமிறங்கிய பிரையன் லாரா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவர் வினய் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.