இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்தியா உள்ளது. அதேவேளையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து அணி உள்ளது. ஹாமில்ட்டனில் உள்ள செடன் பார்க்கில் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
நியூசிலாந்து அணி: மார்டின் குப்தில், காலின் மன்ரோ, கேன் வில்லியம்சன், கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செஃப்ரட், சாண்ட்னர், டிம் சவுத்தி, குஜேலென், இஷ் சோதி, பென்னட்
இந்திய அணி: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், சாஹல், பும்ரா.